கொரோனா தடுப்பூசியை அடுத்த வாரம் போட்டுக் கொள்கிறார் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றத்தை கண்டுள்ளன. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் உலக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்வதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது அமெரிக்க துணை அதிபராக உள்ள மைக் பென்ஸ், நாளை கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.