கென்யா நாட்டில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 32 வயது நபர் ஒருவர் சுமார் 3 மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ள வினோதம் அரங்கேறியுள்ளது.
கென்யாவின் மரித்தோர் நகரத்தில் வசிப்பவர் பீட்டர் கிகன். 32 வயதாகும் இவர் கடந்த 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள காப்கட் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பீட்டரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். பின்னர் மூன்று மணி நேரம் கழித்து சவகிடங்குக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலில் கீறலை ஏற்படுத்தியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது திடீரென உயிர்த்தெழுந்த பீட்டர் வலியால் கத்தியுள்ளார். இதனை அடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தெரிவித்துள்ள உயிர்த்தெழுந்த பீட்டர் கிகன் தனக்கு மூச்சு நின்று விட்ட சமயத்தில் தான் எங்கிருந்தேன் என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். கடவுள் அவருக்கு மறு வாழ்வு கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.