கூட்டணி வேறு கொள்கை வேறு என்றும், கொள்கைபடியே அதிமுக செயல்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மேலும், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், கிறிஸ்துவ அமைப்பினர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பது, தமிழகத்தின் பெருமை எனத் தெரிவித்தார். ச
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான அரசு என்றால், அது அதிமுக அரசு தான், என அவர் கூறினார். ஜெருசலேமிற்கு புனித பயணம் செல்ல, தமிழக அரசு வழங்கும் நிதி 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், அரசியலில் கூட்டணி வேறு கொள்கை வேறு, என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்கைபடிதான் அதிமுக செயல்படும் என்றார்.