கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி பகுதியில் அம்மா மினி கிளினிக் மற்றும் சமுதாய கூடத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கமலுக்கு அரசின் நிதி நிர்வாகம்,சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றி தெரியாது என்றும், அவருக்கு சினிமா மட்டும் தான் தெரியும் என்றும் கூறினார். மக்கள் தான் எஜமானர்கள் என்று தெரிவித்த அமைச்சர் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக மட்டும்தான் கூட்டணி கட்சிகள் சேருவதாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சர் பதவி என்பது முள்படுக்கை, மலர்படுக்கை அல்ல என அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மத்திய அரசுக்கு அடிமை என்று சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது என விமர்சனம் செய்துள்ளார். கொரோனா காரணமாக மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தாமதமாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இப்பணிகள் குறிப்பிட்ட ஒப்பந்த காலத்தில் முடிவடையும் என்றும் கூறினார்.