கட்டுரைகள்

குவாரன்டின் (Quarantine) வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?


ஜெப அருள் ராபின்சன்

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்கு கூட தெரியாத நுண்ணுயிரி இன்று இந்த உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளன. பொருளாதாரமும் வர்த்தகமும் நிலை குழைந்துள்ளன. கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க வல்லரசு நாடுகளும் வளர்ந்த நாடுகளுமே தவித்து வரும் நிலையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொற்று நோயிடமிருந்து தப்புவதற்கும் தடுப்பதற்கும் மக்கள் பின்பற்றிய வழிமுறைதான் குவாரன்டின் எனப்படும் தனிமைப்படுத்துதல்.

உலகின் முதல் தொற்று நோய்: 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலக வரலாற்றில் முதல் தொற்று நோயாக தொழு நோயே அறியப்பட்டது. இந்த நோய் குறித்து யூதர்களின் புனித நூலான தோரா எனப்படும் நூலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒருவருடைய தோளில் வெள்ளை ஏற்பட்டாலோ அல்லது உடலில் உள்ள முடியின் நிறம் மாறினாலோ அவர்களை குறைந்த பட்சமாக 7 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் 7 நாட்களுக்கு பிறகு மருத்துவர் அவரை சோதிக்க வேண்டும். அப்பொழுதும் நோய் பாதிக்கப்பட்டவரின் தோளில் வெள்ளை நிறம் மாறவில்லை என்றால் அவரை மேலும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 14 நாட்களின் முடிவிலும் நோய் குணமடையவில்லை என்றால் அவருக்கு தொழுநோய் ஏற்பட்டதாக கருதப்படும், தொழுநோயானது மருத்துவ வளர்ச்சி இல்லாத கால கட்டத்தில் தொற்றுநோயாக இருந்தது. இதனால் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியே அனுப்பட்டனர். அவர்கள் ஊருக்குள் வரவோ அல்லது ஊரில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கூட அவர்களோடு தொடர்புகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் தொழு நோயுக்கு மருத்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதன் நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இபின் சினா (980-1037) 

இஸ்லாமிய தத்துவயியலாளரும், மருத்துவ நிபுணருமான இபின் சினா (அ) அவிசென்னா என்பவரே முதன் முதலாக மருத்துவ துறையில் குவாரன்டின் (Quarantine) அல்லது தனிமைப்படுத்துதல் எனப்படும் வார்த்தையை அறிமுகப்படுத்தினார். நுண்ணுயிரிகளின் மூலம் நோய் பரவுவதை கண்டறிந்த இபின் சினா இதற்கு குவாரன்டின் மூலமே தீர்வு காணமுடியும் எனவும் கண்டறிந்தார். மொத்தம் 40 நாட்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குரான்டைனில் இருக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த முறைக்கு அல்-அர்பினியா என்று பெயரிட்டார். அர்-அர்பினியா என்றால் 40 என்று அர்த்தம். எதற்காக 40 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் பல அறிவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது ஏன் 30 நாட்களோ அல்லது 50 நாட்களோ அல்லாமல் 40 நாட்களாக இருப்பதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுகிறது. ஆனால் இதற்கு பதில் கூறுபவர்களோ இதனை மத நம்பிக்கையோடு இணைக்கின்றனர். அதாவது விவிலியத்தில் மோசே நாற்பது நாட்கள் மலையில் தியானம் செய்ததும், இயேசு கிறிஸ்து 40 நாட்கள் பாலைவனத்தில் தியானம் இருந்தார் என்றும், 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடிக்கிறார்கள் என்பதோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. ஆனால் அனைத்து மதங்களிலுமே இதைப்போன்ற ஒரு குறிப்பிட்ட தவ முயற்சி கடைபிடிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

14ம் நூற்றாண்டு:

11ம் நூற்றாண்டிலேயே குராண்டைன் முறையை இபின் சினா அறிமுகப்படுத்தியிருந்தாலும் 14ம் நூற்றாண்டில்தான் குவாரன்டின் முறை பெரிய அளவில் பின்பற்றப்பட்டது. 13ம் நூற்றாண்டின் இடைக்கால ஆண்டுகளில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான பிளேக் நோய் தான் உலகளவில் அதிக உயிர்களை பலி வாங்கிய நோயாக கருதப்படுகிறது. அதனால் தான் பிளேக் நோய் (Black Death) அதாவது கருப்பு மரணம் என்று அழைக்கப்பட்டது. மருத்துவ வசதிகள் இல்லாத கால கட்டத்தில் உருவான இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறின. இந்த நோயால் மக்கள் கொத்துக் கொத்தாக மரணமடைந்தனர். இதற்கும் தனிமைப்படுத்துதல் முறையே தீர்வாக இருந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் தனிமைப்படுத்தினர். அதன் மூலமே அதற்கும் ஒரு தீர்வு கொண்டுவரப்பட்டது. 

நோய் தொற்று நோய்: 

சர்வதேச நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது மனிதர்களின் மூலமோ அல்லது மற்ற உயிரினங்களின் மூலமோ வைரஸ்களினால் பரவும் தொற்று நோய்களை வகைப்படுத்தியுள்ளது. அதன்படி, காலரா, டித்தேரியா, பரவக்கூடிய காச நோய், பிளேக், சின்னம்மை, மஞ்சள் காய்ச்சல், வைரல் ஹெமோராஜிக் காய்ச்சல் அதவாது எபோலா, மார்பர்க், காங்கோ கிரிமென் மற்றும் சார்ஸ் ஆகிய நோய்கள் தொற்று நோய்களாக அறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது தான் கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோய். 

தொழில்நுட்பமும், மருத்துவமும் நன்கு வளர்ந்த இந்த காலகட்டத்திலும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளும், உலக சுகாதார நிறுவனமும் திணறி வருகின்றன. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரசை பரவாமல் தடுப்பதற்கு 10ம் நூற்றாண்டில் இஸ்லாமியரான இபின் சினா அறிமுகப்படுத்திய குவாரன்டின் முறையே பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் கொடியில் 5 வளையங்கள் ஏன்?

Vandhana

லாக்டவுன் கக்கண்டி, சுனாமி ராய், கார்கில் பிரபு – இப்படியெல்லாம் கூட பெயர் வைப்பார்களா?

G SaravanaKumar

பீகாரில் “அபாய” கட்டத்தில் நிதிஷ் – பாஜக கூட்டணி?

Jayakarthi

Leave a Reply