ஸ்பெயின் நாட்டில் Virtual கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் மக்கள் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஸ்பெயின் நாட்டில் விர்ச்சுவல் கிறிஸ்துமஸ் தாத்தாவை தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்தை குழந்தைகளுக்கு இணையம் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா தெரிவிப்பார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது.