கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி ஸ்மார்ஃபோன் நிறுவனங்களில் ஒன்றாக சாம்சங்கும் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் புதிய தொழில் நுட்பத்தில் ஸ்மார்போன்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதனிடையே அடுத்த ஆண்டு இந்த நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21, எஸ்21 பிளஸ், எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களையும், அதன்பின் கேல்க்ஸி எஸ்21 எப்இ, கேலக்ஸி இசட் போல்டு 3, இசட் ப்ளிப் 3 மற்றும் இசட் போல்டு எப்இ உள்ளிட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் எனும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் என்ற மடிக்கக்கூடிய மூன்று மாடல் ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த கேலக்ஸி இசட் ப்ளிப் லைட் மலிவு ஸ்மார்ட்ஃபோன் விலையில் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய கிளாஸ் (UTG) தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது. இதே தொழில்நுட்பம் கேலக்ஸி போல்டு 2 மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனம் மிக மெல்லிய கிளாஸ் உற்பத்திக்கு ஆகும் செலவை குறைக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களிலும் இதே கிளாஸ் பயன்படுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.