இளைஞர்களுக்கு குறைந்த செலவில் உயர்தர கல்வி வழங்குவதே, மத்திய அரசின் முக்கியமான நோக்கம், என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட், பள்ளிக் கல்விக்கு பிறகு, பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்க, 59 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
35 ஆயிரத்து 534 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், மீதமுள்ள தொகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு செலவிடப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, பட்டியலின மாணவர்களின் கல்வி வாய்ப்பை அதிகரிக்கும் என தெரிவித்தார். நாட்டில் உள்ள இளைஞர்கள் உயர்தர கல்வியை கற்கவும், அதேநேரத்தில் குறைந்த செலவில் படிக்கவும் ஏற்பாடு செய்வது தான், தங்கள் அரசின் முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.