முக்கியச் செய்திகள் தமிழகம்

குருமூர்த்தியின் பேச்சு, நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் பேச்சு- திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம்!

துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு என திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆடிட்டர் குருமூர்த்தி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று பேசியதாக சண்முகசுந்தரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தனியார் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கௌரவ வாய்ப்புகளாலும், பார் கவுன்சில் தன்னை அங்கீகரித்ததாலும், அவர் தன்னை தற்போது சட்ட அறிஞராகவும் வெளிக் காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார் என விமர்சனம் செய்துள்ளார். இப்போது, நீதிபதிகள் நியமனத்தையே அவர் கேலிக்குரிய ஒன்றாகச் சித்தரித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு என கூறியுள்ளார். நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய – மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே இறுதி முடிவு எடுக்கிறது என்றார்.

அந்த அறிக்கையில், ‘குருமூர்த்தி, அரசமைப்புச் சட்டத்தையும் தாண்டி தகுதி என்று எதைச் சொல்ல வருகிறார்? ஒருபக்கம், பா.ஜ.க.வுடன் கூட்டு என்று தமிழக முதலமைச்சர் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், குருமூர்த்தியோ, பா.ஜ.க.வின் தலைவர் திரு. ஜே.பி.நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியில், அ.தி.மு.க. கூட்டுக்கொள்ளை நடத்திக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசுகிறார். அதை அ.தி.மு.க. அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க.வை எதிர்ப்பதற்காக, சசிகலாவையும் ஆதரிப்போம் என்று சொல்லி, நெருப்பை அணைக்க சாக்கடையையும் அள்ளித் தெளிப்போம் என்று, சசிகலாவைச் சாக்கடையுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார். இத்தகைய அநாகரிகமான, அவதூறான பேச்சுகளை அ.தி.மு.க. இதுவரை கண்டிக்காதிருப்பதைப் பார்த்தால், அக்கட்சியின் கூட்டுக் கொள்ளையையும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரையும் பற்றி குருமூர்த்தி பேசுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத்தான் பொருள்கொள்ள வேண்டியிருக்கும்’ என திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொறியியல் கல்வி; Vocational course படித்தவர்களுக்கு 2% இடங்கள் – அமைச்சர்

Halley Karthik

தி லெஜண்ட் படத்தின் கன்னட டிரைலர் வெளியீடு

Web Editor

கட்டிப்பிடிப்பதை தொழிலாக மாற்றி கட்டணம் வசூலிக்கும் கனடா இளைஞர்!

Web Editor

Leave a Reply