முக்கியச் செய்திகள் தமிழகம்

குப்பை கிடங்கில் வீசப்பட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திருப்பூர் அவினாசி அருகே குப்பை கிடங்கில் வீசப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்டுக்காரன்பாளையம் பகுதியில் கடந்த 25ஆம் தேதி மயங்கிய நிலையில் 5 வயது சிறுமி மீட்கப்பட்டார். மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயான சைலஜா குமாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அதில் சைலஜாகுமாரி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் என்பதும் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தனது கணவரை பிரிந்து வாழ்வதும் தெரியவந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் சைலஜா குமாரி தான் எலி மருந்து சாப்பிட்டு தன் குழந்தைக்கும் கொடுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து சைலஜா குமாரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இவ்வழக்கை கொலைவழக்காக மாற்றி விசாரணை நடத்த உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்

EZHILARASAN D

சித்திரை திருவிழா உருவான சுவாரஸ்யமான வரலாறு

EZHILARASAN D

ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

Niruban Chakkaaravarthi

Leave a Reply