குற்றம்

குடும்பத் தகராறில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

மனைவி சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு விசம் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், அபிநயா தம்பதிகள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் ரித்திகா என்ற இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த ஜெயச்சந்திரன் பல்வேறு நபர்களிடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயசந்திரனுக்கு கொரோனா காரணமாக தொழில் சரிவர இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடன் கேட்டு ஜெயசந்திரனை கடன் கொடுத்தவர்கள் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் தகராறு முற்றிய காரணத்தால் மனைவி அபிநயா குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளச்சலுக்கு ஆளான ஜெயச்சந்திரன் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிகாலை வீட்டிற்குள் மூன்று பேரும் மயங்கி கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் இரண்டாவது குழந்தையான ரித்திகா வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெயச்சந்திரன் மற்றும் அவரது மகனும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மனைவி அபிநயா அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயேந்திரன் மீது கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யபட்டு செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியே காரணத்தால் கணவர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயறிசித்து அதில் இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறையில் இருந்து தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை

Web Editor

அடித்துக் கொல்லப்பட்டாரா தங்கமணி? வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

EZHILARASAN D

கணவரின் கழுத்தை நெரித்து கொலை – மனைவி கைது

EZHILARASAN D

Leave a Reply