முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா.. தடுப்பூசி எடுத்துக் கொள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி கோரிக்கை

தனது குடும்பத்தில் பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் மனைவி பிரீத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொடரில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தி ருந்தார். அதன்படி தொடரில் இருந்து விலகி சென்னை வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அவர் மனைவி பிரீத்தி தனது குடும்பத்தில், ஒரே வாரத்தில் 6 பெரியவர்கள், 4 சிறியவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில், பெயரை நீக்கிவிட்டு, முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என மாற்றி வைத்துள்ள அவர், கொரோனாவால் பாதிக்கப் பட்ட தங்கள் குடும்பத்தினர் தனித்தனி வீடுகள் மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதே சிறந்தது என்று தெரிவித்துள்ள பிரீத்தி, ஐந்து முதல் எட்டு நாட்கள் வரை மிகவும் கடினமானதாக இருந்தது என்றும் உதவி செய்யப் பலர் இருந்தாலும் யாரும் உங்களுடன் இருக்க முடியாது, உங்களை தனிமைப்படுத்தும் கொடுமையான நோய் இது என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?

Halley Karthik

கர்ணன் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Halley Karthik

’பேசி பேசி சலித்துவிட்டது’: நிகழ்ச்சியை நிறைவு செய்த பேச்சாளர்

Halley Karthik