இந்தியா செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்! – கேரள முதல்வர் பினராயி விஜயன்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு, உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்துவோம் என்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், எங்கள் மாநிலத்தில் கண்டிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

மேலும், ஒரு மாநில அரசாக இதை நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று எப்படி உங்களால் கூற முடிகிறது என்று மத்தியிலிருந்து கேட்கப்பட்ட போது நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம், கண்டிப்பாக எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதம் எழுந்த போது அதை எதிர்த்த முதல் மாநிலம் கேரளா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

Ezhilarasan

நிறம் மாறிவரும் சனி கிரகம்!

எல்.ரேணுகாதேவி

சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

Ezhilarasan

Leave a Reply