கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடவுள் ஏசு கிறிஸ்துவின் பிறப்பானது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் நாம் கொண்டாடுவதற்கான நிகழ்வு என்று கூறி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்களிடம் அமைதி, நல்லெண்ணம், இரக்க சிந்தனையை இந்த விழா ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் அமைதியை வளர்ப்பது மட்டுமின்றி, மனிதர்களிடம் மதநல்லிணக்கத்தையும் பேண உதவுவதாகவும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கர்த்தராகிய இயேசு கற்பித்த இரக்கம், மன்னிப்பின் மதிப்புகள் மீதான நமது நம்பிக்கையை இந்த திருவிழா மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.