கிருஷ்ணகிரியில், “உயிர் ஆயிரம்” என்ற அமைப்பு மூலம், ஒரு நிமிடத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கவுதம் கோயல், சக்திவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். “மைடி அப்ளிகேஷன்” மூலம் 500 தன்னார்வலர்கள் இணைந்து, தங்கள் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர். அந்தவகையில், ஒரே ஒரு நிமிடத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இது International Book of Records-ல் இடம்பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், தற்போது நடப்பட்ட மரக்கன்றுகள், “கூகுள் வெதர்” மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்தனர். மரக்கன்றுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் தண்ணீர் விடவில்லை என்றால், அதன் ஈரப்பதம் குறித்த எச்சரிக்கை “தகவல் அப்ளிகேஷன்” மூலம் கிடைக்கப்பெறும் எனவும் கூறினர். இதன் மூலம், தொடர்ந்து மரக்கன்றுகள் பராமரிக்கப்படும் என்றும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.