முக்கியச் செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் ஊழியன் அல்ல காதலன்; தோனியின் செயல்

உலகக்கோப்பை அணிக்கு இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள தோனி அதற்காக சம்பளம் ஏதும் பெறவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

இந்திய முன்னாள் கேப்டன் தோனி அனைத்து விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுத் தந்து கிரிக்கெட் உலகில் தனிப்பெரும் ஜாம்பவானாக வலம் வந்தார். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் விளையாடிய தோனி அதன்பின் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து விரைவில் அவர் ஓய்வு பெறுவார் என்ற வதந்தி பரவியது.

இந்தநிலையில், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். அதன்பின் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற அவர் வழக்கம் போல் சென்னை அணியை வழிநடத்தினார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அந்தாண்டு சென்னை அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தோனியில் தலைமையிலான அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பையானது வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது. இதில், இந்திய அணிக்கான ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. இதை வரவேற்கும் விதமாக தோனி ரசிகர்கள் #Dhoni என்ற ஹேஸ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில், இந்தப்பணிக்கு அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்!

Gayathri Venkatesan

ஊரடங்கில் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முதியோர்

ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !

Halley karthi