செய்திகள்

காவல்துறையினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

தருமபுரியில் ஆதரவற்ற நிலையில் இறந்த 9 பேரின் சடலங்களை அடக்கம் செய்து, மரியாதை செலுத்திய காவல்துறையினரின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியில் பல்வேறு பகுதிகளில் உறவினர்களால் கைவிடபட்ட முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உறவினர்கள் இல்லாமல் அரசு மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக்கூடத்தில் கடந்த 5 மாதங்களாக வைக்கப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உடல்கள் அழுகி துர்நாற்றம் வீச துவங்கியதால், அவற்றை புதைக்க தருமபுரி நகர காவல்துறையினர் முடிவு செய்தனர். இதனிடையே உடல்களை எடுத்து செல்ல சுகாதாரத்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் முன் வராததால் காவல்துறையினரே, உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று, தங்கள் சொந்த செலவில் அடக்கம் செய்து மரியாதை செலுத்தினர். காவல்துறையினரின் இத்தகைய செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ராணுவம்

G SaravanaKumar

“பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் ஜம்மு – காஷ்மீரில் சொத்துகள் வாங்கியுள்ளனர்”

G SaravanaKumar

பூ விற்கும் பெண்களிடம் கூட மாமூல் வசூலிக்கின்றனர் – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

EZHILARASAN D

Leave a Reply