முக்கியச் செய்திகள் குற்றம்

காவலர் தேர்வு மையத்தில் வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் அனுப்ப முயன்ற இருவர் கைது!

கடலூரில் காவலர் தேர்வு நடைபெற்ற மையத்திற்கு செல்போன் எடுத்துச் சென்று வினாத்தாளை படம் பிடித்து அனுப்ப முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழு மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான தேர்வு கடலூர் மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் நடைபெற்றது. 28,624 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். அவ்வாறு தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நெய்வேலி வட்டம் 10ல் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதிய ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அவரது உள்ளாடைக்குள் செல்போனை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். பிறகு கேள்வித் தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அவரது நண்பருக்கு அனுப்ப முயன்ற அவரை, தேர்வு மைய அதிகாரிகள் நோட்டமிட்டுப் பிடித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதே போல் நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே சேப்ளாநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரில் நடைபெற்ற காவலர் தேர்விலும் இளைஞர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட முயன்றுள்ளார்.
செல்போனை மறைத்து எடுத்து வந்து கேள்வித் தாளை படம் எடுத்து அனுப்ப முயன்ற திட்டக்குடி அருகே உள்ள வெண்கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை மடக்கிப் பிடித்த தேர்வு மைய அதிகாரிகள் அவரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘சசிகலாவுடன் நான் பேசியதாக வெளியான ஆடியோ போலி’: செல்லூர் ராஜூ விளக்கம்

Halley Karthik

68-வது தேசிய விருது விழா – சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா

EZHILARASAN D

நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கை

Halley Karthik

Leave a Reply