தமிழகம்

கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கார்கள் திருட்டு; அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை!

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள கார்கள் பழுது பார்க்கும் நிலையத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான இரண்டு கார்கள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள திருமணம் மண்டபம் அருகே அல்ட்ரா கார்ஸ் என்ற பெயரில் பழைய கார்களை பழுது நீக்கும் நிலையம் ஒன்று உள்ளது இதன் அருகே மாருதி கேர் என்ற பெயரில் கார் பழுது நீக்கும் ஒர்க் ஷாப் இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நிலையத்தின் கதவின் பூட்டை உடைத்து அங்கு விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருந்த ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான சொகுசு காரினையும், அதன் அருகே உள்ள ஒர்க்ஷாப்பில் நின்றிருந்த 4லட்சம் ரூபாய் மதிப்பிலான மற்றொரு காரினையும் திருடி சென்றுள்ளனர். மேலும் தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அல்ட்ரா கார்ஸ் நிறுவனத்தின் வாயிலில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனர். எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த சாலையில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல்: அதிமுக தீர்மானம்

Web Editor

மாணவி தற்கொலை: கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்

Janani

மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Halley Karthik

Leave a Reply