இந்தியா

காணொலி வாயிலாக பேசிக்கொண்ட முகேஷ் அம்பானி – மார்க் ஸூக்கர்பெர்க்….ஆலோசித்தது என்ன?

FaceBook Fuel india 2020 என்ற நிகழ்ச்சியை பேஸ்புக் நிறுவனம் ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க் மற்றும் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியும் காணொலி வாயிலாக கலந்துரையாடினர்.
வட்ஸ்அப் சேவை மற்றும் ரீலையன்ஸ் ஜீயோ குறித்து இருவரும் விவாதித்தனர்.

அப்போது பேசிய முகேஷ் அம்பானி” இந்தியாவில் மில்லியன் கணக்கில் வாட்ஸ்அப் பயனாளர்கள் உள்ளனர். அதேபோல ஜீயோவுக்கும் கோடிக்கணக்கில் பயனார்கள் இருக்கின்றனர். அனைவரிடையே ஜீயோ டிஜிட்டல் சேவையை மேலும் எளிதாக்கியுள்ளது. வாட்அப் செயலியும் சேவையை விரிவுபடுத்தும் வகையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜீயோ மார்ட் மூலமாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக விற்பனைக்கு நடைபெறுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இந்தியாவின் சிறிய கிராமங்களிலும் டிஜிட்டல் சேவை பயன்படுத்த ஜீயோ மார்ட் ஒரு வழியாக உள்ளது” என்றார். பேஸ்புக் நிறுவனர் மார்க் பேசுகையில், இந்தியாவில் உள்ள சிறு தொழில்கள் மிகவும் முக்கியமானவைகள். பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி செல்வதற்கு சிறு, குறு தொழில்கள் பிரதானமாக பங்காற்றுகின்றன. எனவே சிறு, குறு தொழில்களின் வளர்ச்சியில் காரணியாக இருக்க வேண்டியது நமது கடமை. ஜீயோவும் அதில் முக்கிய அம்சமாக இருப்பதால் ஜீயோவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!

Halley Karthik

சர்வதேச சந்தையில் கோதுமை விலை கிடுகிடு உயர்வு

Halley Karthik

”ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தொடங்கப்படுபவைதான் நாளைய பெருநிறுவனங்கள்”- பிரதமர் மோடி!

Jayapriya

Leave a Reply