காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் குறித்து,அக்கட்சியின் மூத்த தலைவர்கள், சோனியா காந்தியை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள், அந்தோணி, சிதம்பரம், கமல்நாத் மற்றும் அதிருப்தி தலைவர்கள் குலாம் நபி ஆசாத், சசி தரூர், ஆனந்த் சர்மா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கை குறித்தும், கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் உள்ளிட்டவை குறித்து கட்சி தலைவர் சோனியாகாந்தியிடம் ஆலோசனை தெரிவிக்கவுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில், ராகுல்காந்தி, பிரியங்காவும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சூர்ஜேவாலா, மீண்டும் ராகுல்காந்தியை கட்சியின் தலைவராக நியமிக்க 99.9 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.