செய்திகள்

கல்வி கட்டணம் செலுத்த மறுக்கும் தந்தையை கண்டித்து மகன் உண்ணாவிரதம்

மருத்துவ படிப்புக்கு கல்வி கட்டணம் செலுத்த மறுக்கும் தந்தையை கண்டித்து மகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரசன்ன சாரதி. இவர், காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கருத்துவேறுபாடு காரணமாக இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். பிரசன்ன சாரதி அவரது தாயுடன் சேர்ந்து வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கான கட்டணத்தை தாய் செலுத்தி வந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவருடைய தாய் கடந்த மே மாதம் உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் படிப்பு உள்ள நிலையில் தந்தை பார்த்தசாரதியிடம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், அவர் கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முறை கல்விக்கட்டணம் கேட்டும் மறுத்ததால் நேற்று வீராம்பட்டினம் சாலையில் உள்ள அவரது இல்லத்தின் வாயிலில் தனது நன்பர்கள் ஆதரவோடு பிரசன்ன சாரதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் காவல் நிலைய போலீசார் மாணவன் மற்றும் குடும்பத்தினரை சமாதானம் செய்ய காவல் நிலையம் அழைத்து சென்றனர். தந்தையை கண்டித்து மகனே உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இரு சக்கர வாகனத்திற்குள் புகுந்து இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு!

Web Editor

குடும்ப பிரச்சினையால் தன்னைதானே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சிஆர்பிஎப் வீரர்-கோவையில் சோக சம்பவம்

Web Editor

கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அதிரடி

Halley Karthik