தமிழகம்

கல்லூரி மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பவானி அருகே கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் பருவாச்சி நாயக்கனூர் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை கடந்த 20ஆம் தேதி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே மாணவியை காணவில்லை என பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக இளைஞர் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”தேஜஸ் ரயிலை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டும்”- ரயில்வேத்துறைக்கு எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்!

Jayapriya

இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

G SaravanaKumar

தீரன் பட பாணியில் புனே சென்று திருடர்களை கைது செய்த போலீஸ்

G SaravanaKumar

Leave a Reply