தமிழகம்

கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை: தேனி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கர்ப்பிணி மனைவியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கற்பகவள்ளி மூன்றாவதாக கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் சுரேஷ் கற்பகவள்ளியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கற்ப்பிணி என்றும் பாராமல் கற்பகவள்ளியை கொடூரமாக கொலை செய்துள்ளார் சுரேஷ். கடந்த 2015ம் ஆண்டு நகழ்ந்த இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையில் சுரேஷ் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இன்று தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி அப்துல் காதர் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன்’ – ஓபிஎஸ்

Arivazhagan Chinnasamy

நாளை முழு சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்?

Jayakarthi

கைவிடப்படுகிறதா பழைய ஓய்வூதிய திட்டம் – நிதியமைச்சர் பதில்

EZHILARASAN D

Leave a Reply