முக்கியச் செய்திகள் இந்தியா

கர்நாடக பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகளுக்கு காவல்துறைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு – கர்நாடக மாநில எல்லையில்,வடஹள்ளி அருகில் “தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது” என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைகளை இரு தினங்களுக்கு முன்பு கன்னட சலுவாலி வாட்டள் பக்ஷா அமைப்பினர் அகற்றியுள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் கடலூரில் பேசும் போது, கன்னட சலுவாலி வாட்டள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தொடர்ந்து தமிழக எல்லையில் புகுந்து பெயர் பலகைகளில் இருக்கின்ற தமிழ் எழுத்துக்களை அழித்து சேதப்படுத்தி வருகிறார் என்றும், இதனை அம்மாநில அரசு கட்டுப்படுத்தவில்லையெனில் தமிழ்நாட்டிற்கு வரும் கர்நாடக அரசுக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்களை சிறைபிடிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் இங்கு கன்னட மொழிகளில் எழுதப்பட்டிருக்கின்ற எழுத்துக்களை அழிப்போம் என்றும் தெரிவித்து இருந்தார்.இதனை அடுத்து சென்னையில் உள்ள கர்நாடகா வங்கி, உடுப்பி உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த அண்ணாமலை

G SaravanaKumar

ஆங்கிலத்தில் அசத்தும் குப்பைப் பொறுக்கும் பெண்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!

Gayathri Venkatesan

சேலம்: தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

EZHILARASAN D

Leave a Reply