கர்நாடக சட்டமன்ற கீழவையில் பசுவதை தடுப்பு சட்ட மசோதா, கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டமன்ற மேலவையில் மசோதாவை நிறைவேற்ற, அவை இன்று கூடியது. அப்போது, மேலவை தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் சந்திர செட்டியை, மேலவைக்குள் செல்ல முடியாமல் பாஜக உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.
அவருக்கு பதிலாக மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த மேலவை துணை தலைவர் தர்மே கவுடா, அவையை நடத்த முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அவர்கள், மேலவை துணை தலைவரை இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டனர். இதனால், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்