கடும் அமளிக்கு இடையே கர்நாடகா சட்டப்பேரவையில் பசு வதை தடுப்பு சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகாவில் 2010ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த போது மாடுகளை இறைச்சிக்காக கொல்வது மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்கு தடை செய்ய வழிவகை செய்தது. 2013ஆம் ஆண்டு அச்சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு காத்திருந்த தருணத்தில் அச்சட்டம் காங்கிரஸ் அரசு திரும்ப பெறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2019ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக அரசு பொறுப்பேற்றால் கர்நாடாகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று கூடிய சட்டசபையில் கால்நடைத்துறை அமைச்சர் பிரபுசவான் பசு வதை தடுப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளான மஜத மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சபாநாயகரை முற்றுகையிட்டு கண்டன குரலை எழுப்பினர். கடும் அமளிக்கு மத்தியில் பசு வதைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தில் பசு மற்றும் காளைகள், எருமைமாடுகளை கொல்ல தடை எனவும் மீறினால் 5லட்ச ரூபாய் அபராதம், 7ஆண்டுவரை சிறை தண்டனை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக கால்நடைத்துறை அமைச்சர் பிரபுசவான் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் விதான் சவுதா வின் கிழக்கு நுழைவாயில் பசுக்கள் கொண்டுவந்து கோமாதா பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.