முக்கியச் செய்திகள் தமிழகம்

”கமல்ஹாசன் தமிழகத்தில் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!

கமல்ஹாசன் தமிழகத்தில் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து வலசை கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்தநாள் விழா வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ படத்தை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது, கமல்ஹாசனுக்கு முதலில் அரசியல் மற்றும் அதிமுக ஆட்சியை பற்றி தெரிய வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தில் விரைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இந்தியாவிலேயே முன்னுதாரணமாக தமிழகம் விளங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை பாராட்டாமல் கமல்ஹாசன் குறை சொல்லிக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் தமிழகத்தை கமல்ஹாசன் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை என கூறிய அவர், தமிழகம் சீராக இருக்கின்ற காரணத்தினால் தான் வேறு எந்தவித மிரட்டலும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் கமல்ஹாசனால் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆடிப்பெருக்கு விழா; காவிரியில் குளிக்க-தர்ப்பணம் கொடுக்க தடை

G SaravanaKumar

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது ஏன்?- ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் விளக்கம்

Web Editor

தமிழகத்தை கண்காணிக்கும் அமித் ஷா

Halley Karthik

Leave a Reply