ஆப்பிரிக்காவில் உள்ள வனப்பகுதி ஒன்றில் குளத்தின் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த சிறுத்தையை முதலை ஒன்று கண்ணிமைக்கும் நோடியில் தாக்கிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக வனத்தில் வாழும் முக்கிய வனவிலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்டவை வேட்டையாடு காட்சிகள் பலவற்றை இணையதளங்களில் வாயிலாக நாம் பார்த்திருப்போம். ஆனால் பலம் வாய்ந்த வனவிலங்குகள் ஒரு சிறிய விலங்குகளால் வேட்டையாடப்படும் நிகழ்வு என்பது மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. அத்தகைய பயங்கரமான நிகழ்வு ஒன்று ஆப்பிரிக்கா வனப்பகுதி நிகழ்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆப்பிரிக்க வனப்பகுதியில் உள்ள குளத்தில் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடிக்க சென்றது. அப்போது சிறுத்தையை மறைந்திருந்து கவனித்த 13 அடி உள்ள நைல் முதலை ஒன்று கண்ணிமிகைக்கும் நேரத்தில் சிறுத்தையில் தலையை கடித்து தண்ணீருக்கும் இழுத்து சென்றது. இந்த அசாதாரணமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
