முக்கியச் செய்திகள் தமிழகம்

கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 8 மாத கர்ப்பிணி!

திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் ஊராட்சி, மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவிதா. 8 மாத கர்ப்பிணியாக உள்ள இவர், கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என அவர்கள் எழுதி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரசவம் நெருங்கும் நேரத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’ஏன் நீக்கினாங்கன்னு சொல்லவே இல்லை’: வார்னர் வருத்தம்

Halley Karthik

உதகை மலர் கண்காட்சி ரத்து? : பூத்துக்குலுங்கும் மலர்கள்

Jeba Arul Robinson

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு தனித்தனி அறைகள் – சாதிய மோதலை தடுக்க நடவடிக்கை

EZHILARASAN D

Leave a Reply