கடல் அலையில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக புதிய மிதவை இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் தற்போது தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதனை எளிதாக எதிர்கொள்ள தொழில்நுட்பம் உதவுகிறது. அந்தவகையில் கடல் அலையில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பதற்காக மிதவை இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது “U SAFE’ என பெயரிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் ஜாக்கெட் போன்ற அமைப்பு கொண்ட இந்த இயந்திரத்தை கடலில் எறிந்த பிறகு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இதனை இயக்க முடியும். ராட்சத அலைகளை கூட இது எளிதில் கடந்து செல்லும் திறன் பெற்றது. கடலில் சிக்கியவர்கள் இந்த இயந்திரம் அருகில் வந்தவுடன் அதனை இறுகப் பற்றிக் கொண்டால் போதும். மீண்டும் ரிமோட் வைத்து இதனை இயக்கி அவர்களை பத்திரமாக மீட்கலாம். ஓராண்டுக்கு சுமார் 1000 பேரை இந்த தொழில்நுட்பம் மூலம் காப்பாற்ற முடியும் என கூறுகின்றனர்.
இயந்திரத்தின் உதவியால் மற்றவர்களை மீட்க முயற்சிக்கும் போது, உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும் மற்றும் நேரமும் வீணாகாமல் இருக்கும்.