
நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் பாதிப்பு காரணமாக பெரும்பாக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பார்வையிடடார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரியளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் பாதிக்கப்பட்ட மின் நிலையங்கள் மாலைக்குள் சரிசெய்யப்பட்டு மின்சார இணைப்பு வழங்கப்படும் என்றும், கடலூரில் நாளைக்குள் சரிசெய்யப்பட்டு மின்சார இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென் சென்னையில் 308 துணை மின்நிலையங்கள் உள்ளன. அதில் 87 நிவர் புயலால் பாதிக்கப்பட்டது. தற்போது வரை 50 பழுது நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள துணை மின் நிலையங்கள் இன்று மாலைக்குள் சரி செய்யப்பட்டு விடும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டடம் அச்சிரப்பாக்கத்தில் சாலைகளில் விழுந்துள்ள மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு இன்று மாலைக்குகள் மின்விநியோகம் சீர் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.