கடன் தொல்லையால் நகைக்கடை வியாபாரி, குடும்பத்தினருடன் உயிரிழப்பு
முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், நகைக்கடை நடத்தி வருபவர் ஹரி. கடந்த ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த நகைக்கடையால், ஹரிக்கு 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால், பணத்தை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு, நடைக்கடை முன் போராட்டம் நடத்தியதுடன், காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதையடுத்து தந்தை, தாய், மனைவி, மகள் என குடுத்தினருடன் தலைமறைவான ஹரி, மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள ஹோட்டலில், அறை எடுத்து தங்கியுள்ளனர். மற்றொரு அறையில், அவர்களது கார் ஓட்டுநர் தங்கியுள்ளார். இந்நிலையில், ஒரே அறையில் இருந்த குடும்பத்தினர் 5 பேரும் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளனர். இதனை அறிந்த கார் ஓட்டுநர் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள், 5 பேரையும் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்