குற்றம்

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர்!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழில் சரிவர இயங்காததால், மோகன் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்த நபர்கள் மோகனிடம் பணத்தை தருமாறு வலியுறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வந்து கடன் கொடுத்தவர்கள், மோகனை மிகவும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால் மனமுடைந்த மோகனனும் அவரது மனைவியும் 3 குழந்தைகளையும் கொன்று விட்டு, அவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லைக்கு ஆளான மோகன் யாரால் பாதிக்கப்பட்டார், அந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி

Arivazhagan Chinnasamy

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என கட்சிகளை வற்புறுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

G SaravanaKumar

சுசில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை!

Jeba Arul Robinson

Leave a Reply