முக்கியச் செய்திகள் தமிழகம்

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மோகன் தச்சு தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழில் சரிவர இயங்காததால், சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்த நபர்கள் மோகனிடம் பணத்தை தருமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வந்து கடன் கொடுத்தவர்கள், மோகனை மிகவும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மோகனனும் அவரது மனைவியும் தனது 3 குழந்தைகளை கொன்று தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லைக்கு ஆளான மோகன் யாரால் பாதிக்கப்பட்டார், அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

வலைகளை அறுத்து எறிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

Halley karthi

அசால்ட்டாக அரை சதம்.. இங்கி. பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டும் ஷமி

Gayathri Venkatesan

’எம்.ஜி.ஆருக்கு பக்கத்துணையாய் விளங்கியவர் புலமைப்பித்தன்’: மு.க.ஸ்டாலின், வைகோ இரங்கல்

Ezhilarasan

Leave a Reply