சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலவருமான ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஏற்கனவே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து 5 மணி நேரமாக நடந்த இக்கூட்டத்தில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டுவது, தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.