நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியில் மேற்கு ஜானக்புரி மற்றும் தாவரவியல் பூங்கா வழிதடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் காணொலி மூலம் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா எவ்வளவு வேகத்தில் நவீனமாகி வருகிறது என்பதற்கு ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையே எடுத்துக்காட்டு என குறிப்பிட்டார். உலகிலேயே 7 சதவீதம் மட்டுமே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அதில், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் தற்போது சேர்ந்துள்ளது. 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டுநர் இல்லா தானியங்கி சேவை அளிக்கப்பட உள்ளது.
மேலும் ருபே டெபிட் கார்ட்டை பயன்படுத்தி டெல்லி விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழிதடத்தில் பயணிக்கும் சேவைக்கான திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் 2022ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.