வத்தலகுண்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கனரக சரக்கு வாகனம் மோதி இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேனி – திண்டுக்கல் புறவழிச்சாலையில்
காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில்
தறிகெட்டு ஓடியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக சென்ற சரக்கு வாகனம் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சாலையோரம் பேக்கரியில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மீது மோதியதில் 10 – அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும்உதவியாளர் உயிர் தப்பினர் . இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சரக்குவாகனம் மோதியதில் உயிரிழந்தார் .
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலக்குண்டு காவல் துறையினர், விசாரணைமேற்கொண்டதில் , உயிரிழந்தவர் தும்மலப்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் என தெரிய வந்தது.