முக்கியச் செய்திகள் குற்றம்

ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற காதலன்!

தன்னிடம் இருந்து விலகிய காதலியை, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவைச் சேர்ந்த இளம்பெண், தஞ்சாவூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த மாணவியும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கார் மெக்கானிக்கான அஜித், ஒரு கட்டத்தில் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் வேலைக்கும் செல்லவில்லை. இளைஞர் தவறான பாதைக்கு செல்வதை உணர்ந்த மாணவி, இளைஞரை விட்டு மெல்ல மெல்ல விலகியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் அஜித் தொடர்ச்சியாக தொல்லை கொடுக்க, தன்னுடன் பழக வேண்டாம் என மாணவி கண்டித்துள்ளார். இதனால் மாணவியும் அஜித்தும் சில நாட்களாகப் சந்திக்காமல் இருந்துள்ளனர். ஆனாலும் காதலி தன்னை விட்டுப் பிரிந்ததால் ஆத்திரத்தில் இருந்த அஜித் மதுபோதையில்தான் அந்த பயங்கரத்தை செய்து முடித்தார்.

கல்லூரி செல்வதற்காக அரசுப் பேருந்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கு மாணவி வந்துள்ளார். அவரோடு அஜித்தும் மதுபோதையில் அதே பேருந்தில் பயணம் செய்துள்ளார். பின்னர் மாணவி, பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு செல்ல நகர பேருந்தில் ஏறியுள்ளார். அவரது பின்னிருக்கையில் அமர்ந்த அஜித் தன்னை காதலிக்கும்படியும் திருமணம் செய்துகொள்ளும்படியும் மீண்டும் வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் மாணவியோ, தன்னிடம் இனிமேல் பேச வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித், “எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது” எனக் கூறி கையில் வைத்திருந்த பேனா கத்தியால் ஆஷாவின் கழுத்தை அறுத்துவிட்டு, பேருந்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட நின்றுகொண்டிருந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டது.

அஜித் பேருந்தில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற நிலையில், சாலையில் சென்ற பொதுமக்கள் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை தெரிந்து கொண்டு அவரை மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார், அஜித்தை கைது செய்ததோடு காயமடைந்த மாணவியை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தன்னிடம் இருந்து விலகிய காதலியை ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்கள் உடை மாற்றும் அறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

Web Editor

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா; காங்கிரஸ் புறக்கணிப்பு- செல்வபெருந்தகை

G SaravanaKumar

மண்ணை மொழியை மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் : கமல்ஹாசன்

Halley Karthik

Leave a Reply