மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ.100 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.. அதற்கு மேல் கூடுதலாக சிலிண்டர் தேவைப்படுவோர் மானியமில்லாத சிலிண்டரை, அப்போதைய சந்தை விலைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்தி வந்தனர்.. இந்நிலையில் மானிமற்ற சிலிண்டரின் விலை, கடந்த 1ம் தேதி 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து சென்னையில் மானியமில்லாத காஸ் சிலிண்டர் 710-ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இதுவரை 5 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.