தமிழகம்

ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளது: முதல்வர் பழனிசாமி

ஒரே குடும்பமாக, ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல நிகழ்ச்சி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சராக திறம்பட பணியாற்றி கொண்டிருப்பவர் ராஜலெட்சுமி என புகழாரம் சூட்டினார். ஒரே குடும்பமாக ஒரே அணியில் இருப்பதால்தான் அதிமுக வலிமை பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி உள்ளதாகவும் கூறினார்.

இதேபோல், அமைச்சர் ராஜலெட்சுமி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழக மக்களுக்கு நன்றி : ப.சிதம்பரம்!

EZHILARASAN D

கன மழை காரணமாக தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

Web Editor

நவ.30க்குள் வாதங்களை முடித்துவிடுங்கள்; இறுதிக்கட்டத்தை எட்டும் அதிமுக பொதுக்குழு வழக்கு

EZHILARASAN D

Leave a Reply