கோவையில் ஒரு ஆம்லெட்டுக்கு இரண்டு இலை தரமறுத்த உணவக ஊழியரை, கல்லூரி மாணவர்கள் தாக்கிய காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகியது.
கோவை அடுத்த நரசிபுரம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில், உணவகம் ஒன்றில் குடிபோதையில் 3 இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் ஒரு ஆம்லெட் ஆர்டர் செய்து இரண்டு இலைகளை அளிக்கும்படி கேட்டதாகவும், இதற்கு ஊழியர் குமார், வாழை இலை தரமுடியாது எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஊழியர் மீது தாக்குதல் நடத்தி, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்த புகாரின் பேரில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பிரவீன், விக்னேஷ், ரமேஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் உள்ளிட்ட இருபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.