ஒருவரின் வெளிப்படையான ஒப்புதல் இன்றி அவருடன் உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையாக கருதும் புதிய சட்டத்தை டென்மார்க் அரசு இயற்றியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் ஒருவரின் வெளிப்படையான ஒப்புதல் இன்றி உடலுறவு கொண்டால் அது பாலியல் குற்றமாக கருதப்படும் என டென்மார்க் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்டம் ஒன்றையும் அந்நாடு அரசு இயற்றியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு நீதியமைச்சர் நிக் ஹேக்கரூப், இந்த சட்டத்தின் மூலம் இரு தரப்பினரும் சம்மதிக்கவில்லை என்றால் அது பாலியல் வன்கொடுமை என்பது தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் டென்மார்க்கில் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டம் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை அந்நாட்டில் ஒருவரை துன்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ மேற்கொள்ளப்படுவது மட்டுமே பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டு வந்தது.
ஒருவரின் வெளிப்படையான ஒப்புதல் இன்றி நடைபெறும் உடலுறவை பாலியல் வன்கொடுமை என அங்கீகரிக்கும் 12 ஆவது நாடாக டென்மார்க் மாரியுள்ளதாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக உள்ள டென்மார்க்கில் ஆண்டுக்கு சுமார் 11,400 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அந்நாடு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.