முக்கியச் செய்திகள் உலகம்

ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த பெண்; ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை!

ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பிரபலமாகிய சாஹர் தபாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் 19 வயது ஈரானிய பெண் சாஹர் தபார். பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் தன்னை மாற்றிக் கொள்வதற்காக அவர் ஏராளமான பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது முகம் வேறு விதமாக மாறிவிட்டது. அதனால் அவரை நெட்டிசன்கள் அனைவரும் ‘Zombie ஏஞ்சலினா ஜோலி என அழைத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கலாச்சார குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் சாஹர் தபாருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலில் மற்றவர்களை தவறாக வழிநடத்தியது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பேசியதற்காகவும் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன.

மேலும் அவர் இன்ஸ்டாகிராமில் எடிட் செய்த புகைப்படங்கள் பலவற்றை பதிவேற்றம் செய்து ஏமாற்றியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற பல காரணங்களால் அவர் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எடப்பாடி தொகுதியில் பழனிசாமி முன்னிலை!

Halley Karthik

தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை – திருமாவளவன் கருத்து

Jeba Arul Robinson

திருடப்பட்ட கவரிங் செயினை தங்கம் என்று போலீசில் புகாரளித்த பெண்!

Leave a Reply