உலகம்

எவரெஸ்ட் சிகரம்: முன்பை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என நேபாள அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு வருகின்றன. சீனா இறுதியாக கணக்கிட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், நேபாள நாடு எடுத்திருந்த அளவை விட சற்று குறைவாகவே இருந்தது. முன்னதாக நேபாளம் எவரெஸ்டின் உயரத்தை 8,848 மீட்டர் என கணக்கிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள அரசு கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த அளவை ஒப்பிடுகையில் 0.86 உயர்ந்துள்ளது. தொடக்கத்தில் 1954ம் ஆண்டு இந்த சிகரத்தின் உயரம் கணக்கிடப்பட்டது.

2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இதன்காரணமாகவே மீண்டும் உயரம் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கையில் பிச்சை எடுப்பது மற்றும் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு!

Nandhakumar

ராஜபக்சே குடும்பம் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டமா ?

Halley Karthik

டெல்டா வைரஸ்: மீண்டும் முகக்கவசம் அணிய இஸ்ரேல் அரசு உத்தரவு

Leave a Reply