இந்தியா

எல்லை மோதல் விவகாரத்தில், எத்தகைய சவாலையும் இந்தியா எதிர்கொள்ள தயார்: ராஜ்நாத் சிங்

சீனாவுடனான எல்லை மோதல் விவகாரத்தில், எத்தகைய சவாலையும் இந்தியா எதிர்கொள்ள தயாராக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் துண்டிக்கல் விமான படை அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்களுக்கான வழியனுப்பு விழாவில், பங்கேற்ற அவர், வீரர்களின் கூட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், லாடக் எல்லையில் அத்துமீறிய சீனாவிற்கு எதிராக, இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். அமைதியான முறையில் இரு தரப்பு பிரச்சினையை தீர்ப்பதற்கு பல கட்ட பேச்சு வார்ததைகள் மேற்கொண்டதற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்ததையும் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இருப்பினும் நாட்டின் சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டால், எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராகவே உள்ளது எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சிகளை, விமானப்படை அதிகாரிகளுடன் அமர்ந்து கண்டு ரசித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி அளித்த ஷிகர் தவான்!

EZHILARASAN D

‘உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’- நடிகை ஊர்வசி ரவுடேலா ட்வீட்

Jayasheeba

“போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும்”- டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம்!

Jayapriya

Leave a Reply