ஆசிரியர் தேர்வு தமிழகம்

எனது ஆட்சியை சிலர் திட்டமிட்டு குறை கூறி வருகிறார்கள்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் தமது ஆட்சியை சிலர் திட்டமிட்டு குறை கூறி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக-வினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து நாகர்கோயில் பயணியர் விடுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்த மாணவ மாணவிகள் 13 பேரை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து கிறிஸ்துமஸ் விழா மேடையில் கேக் வெட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் மதலநல்லிணக்க மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அன்பு கருணை எனும் யேசுவின் போதனை அடிப்படையில் கிறிஸ்தவ நிறுவனங்கள் பல்வேறு நற்பணிகளை செய்து வருவதாகக் குறிப்பிட்டார். கிறிஸ்தவ நிறுவனங்களின் அறப்பணிகள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாகவும் அவர் கூறினார். கிறிஸ்துவர்களுக்கு தமிழக அரசு அளித்து வரும் பல்வேறு உதவிகளை அவர் பட்டியலிட்டார்.

சிறப்பானப்பணிகளை மேற்கொள்ளும் தமது அரசை சிலர் திட்டமிட்டு வேண்டுமென்றே குறை கூறுவதாகத் தெரிவித்தார். தாம் முதல்வர் என்பதை பதவியாக கருதவில்லை என்றும், அதை ஒரு பணியாகவே செய்வதாகவும் கூறினார்.

பதவி ஆசை தேவை என்றும் அதே நேரத்தில் பதவி வெறி இருக்க கூடாது என்றும் கூறினார். பதவி வெறி கண்ணை மறைத்து விடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இளமைப் பருவத்தை இளைஞர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தவர் தமது ஆட்சியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா

Arivazhagan Chinnasamy

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை!

Vandhana

நாளை 2 முக்கிய நிகழ்ச்சிகள்: ரஜினிகாந்த் திடீர் அறிக்கை

Halley Karthik

Leave a Reply