எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தபின்னர் பேசிய அவர், விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக டெல்லியைச் சுற்றி ஒரு சதி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார். வேளாண் சட்டங்கள் காரணமாக நிலம் பறிபோய் விடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒப்பந்த அடிப்படையில் பால் பண்ணையில் இருந்து பால் கொள்முதல் செய்பவர்கள் விவசாயிகளுடைய பசுமாடுகளையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்களா என்பதை விவசாயிகள்தான் தெளிவு படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எதிர்கட்சி வரிசையில் உள்ளவர்கள் விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாகவும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக விவசாய அமைப்புகள், எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்தே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பதாகவும் என்றும் அவர் விளக்கம் அளித்தார். மத்திய அரசு எப்போதுமே விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.