முக்கியச் செய்திகள் தமிழகம்

”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!

தேவையான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் கூறியுள்ளார்.

மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியில் பொது செயலாளராக பொறுப்பு ஏற்பதை மகிழ்ச்சியாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பா வழியில் கட்சியை வளர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காங்கிரஸ் தேர்தல் பரப்புரை விரைவில் தொடங்கும் என கூறிய அவர், தற்போது அடி மட்டத்தில் இருந்து தேர்தல் வேலைகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மேற்பார்வையாளர் குண்டு ராவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தங்களுக்கு தேவையான தொகுதியை நிச்சயமாக கேட்டுப் பெறுவோம் எனவும் உறுதியாக கூறியுள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியான கூட்டணி என்றும், அதில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை என்றும் கூறியுள்ளார். இறுதி கட்டத்தில் தான் ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து கூற முடியும் தற்போது வரை இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மருத்துவர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

EZHILARASAN D

பிரதமரை வரவேற்க ஒன்றுகூடும் திமுக, அதிமுக, பாஜக

EZHILARASAN D

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

EZHILARASAN D

Leave a Reply