வணிகம்

ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் அமேசான்!

அமேசான் தனது டெலிவரி ட்ரோன் திட்டம், பிரைம் ஏர் நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அமெரிக்க பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக விமான பார்சல் சேவையை கடந்த 2016 ஆம் தொடங்கியது. வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யும் பொருட்கள் விமானம் மூலம் மற்ற நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதற்காக முதல் முறையாக தன்னுடைய பெயரில் கார்கோ விமானத்தை நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு ட்ரோன்கள் எனப்படும் சிறிய ரக விமானங்கள் மூலம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யும் திட்டத்துக்கும் அனுமதி பெற்றது.

இந்நிலையில் டெலிவெரி ட்ரோன் திட்டம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமேசானின் டெலிவெரி ட்ரோன் திட்டம் மற்றும் பிரைம் ஏர் நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் உள்ளவர்கள் வேலையிழப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ட்ரோன் திட்டத்தை விரைவில் தொடங்கும் வகையில் ஆன்லைன் சில்லறை நிறுவனமான ஸ்பெயினின் ஏர்னோவா ஏரோஸ்பேஸ் மற்றும் ஆஸ்திரியாவின் எஃப்ஏசிசி ஏரோஸ்பேஸ் ஆகியவற்றுடன் தற்காலிக ஒப்பந்தங்களை எட்டியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சர்வதேச விமான சேவைக்கான தடை ஜன.31 வரை நீட்டிப்பு

Ezhilarasan

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

Vandhana

இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் தலைவர் முதலிடம்!

Dhamotharan

Leave a Reply